முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைந்த தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      விளையாட்டு
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: ஐ.சி.சி.யின் பெருமைமிகு ‘ஹால் ஆப் பேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹால் ஆப் பேம்...

இதுதொடர்பாக தமிழக முதல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஐ.சி.சி.யின் பெருமைமிகு ‘ஹால் ஆப் பேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு என் வாழ்த்துகள். ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐ.பி.எல். கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர் சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.

தல பார் எ ரீசன்...

உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலை நேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள். உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே 'தல பார் எ ரீசன்' என்ற புகழுரை ஓயாது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து