முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப்பெற்ற 56 பேர் அரசின் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சனிக்கிழமை, 7 மார்ச் 2026      தமிழகம்
Stalin 2024-12-03

சென்னை, யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப்பெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யு.பி.எஸ்.சி. தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் நாடு முழுவதும் மொத்தமாக 958 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வில் இறுதித்தேர்வான நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து 60 பேர் மொத்தமாக யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 10 ஆண்டுகளுக்கு பின் டாப் 10 இடங்களில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2வது இடத்தையும், ராஜா மொகைதீன் 7வது இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் இருந்து யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட்டு, சிகரம் தொட்ட 56 நான் முதல்வன் - தமிழ்நாடு அரசின் குடிமைப்பணி பயிற்சி மைய மாணவர்கள் என்றும், ஸ்டாலின் அரசின் மற்றும் ஒரு சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து