முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாட்கள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

செவ்வாய்க்கிழமை, 10 ஜூன் 2025      தமிழகம்
Stalin 2020 07-18

சென்னை, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக இன்று சேலம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். அங்கு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலமாக புறப்பட்டு 11 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைகிறார். அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து  மாலை சேலம் செல்லும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சி முடித்துவிட்டு இரவு மேட்டூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (ஜூன் 12ம் தேதி) காலை 9 மணிக்கு மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து