முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் தேசத்தில் விளையாடுவது எளிதான இல்லை: தினேஷ் கார்த்திக்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      விளையாட்டு
Dinesh-Karthik 2025-06-17

Source: provided

சென்னை : கிரிக்கெட் தேசமான இங்கிலாந்துக்கு சென்று விளையாடுவது எளிதல்ல என்று முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடர்...

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

எதிர்பார்ப்பு...

கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் சுப்மன் கில்லை எச்சரிக்கும் வகையில் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். 

சிங்கத்தின் குகைக்குள்... 

அதில், "இந்தியாவுக்கு டெஸ்ட் கேப்டனாக இருப்பதன் மகத்துவத்தை அவர் (சுப்மன் கில்) இப்போது உணர்ந்திருக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் சிங்கத்தின் குகைக்குள் சென்று கொண்டிருக்கிறார். கிரிக்கெட் தேசமான இங்கிலாந்துக்கு சென்று விளையாடுவது எளிதல்ல. பல சூப்பர் ஸ்டார்களைக் கொண்ட அணிகளே அங்கு சென்று விளையாடுவதற்கு சிரமப்பட்டுள்ளன.

பின்னடைவு...

இந்த தொடரில் சுப்மன் கில்லுக்கு அதிர்ஷ்டமாக உள்ளது ஒன்றே ஒன்று தான். அது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு தாக்குதல் மட்டுமே. ஆனால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் நிச்சயமாக இந்தியாவை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் பந்துவீச்சு இங்கிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. அது இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம்" என்று கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து