முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      இந்தியா
Balgam Attack-2025-04-24

Source: provided

ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் 16 சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கான ஆன்மிக யாத்திரையும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிக்கவும் சுற்றுலா பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் ஜம்மு காஷ்மீர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, உமர் அப்துல்லா கடந்த மாதம் அமைச்சரவை கூட்டத்தை பஹல்காம் பகுதியில் நடத்தினார். அப்போது, சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க வேண்டும் என மந்திரி சபை அழைப்பு விடுத்திருந்தது.

துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், 'காஷ்மீர் மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சில சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளேன். பஹல்காமில் உள்ள பெடாப் பள்ளத்தாக்கு மற்றும் பூங்காக்கள், வெரினாக் தோட்டம், கோகெர்னாக் தோட்டம் மற்றும் அச்சபால் தோட்டம் ஆகியவை நேற்று திறக்கப்படும்' என தெரிவித்தார். இதன்படி, பஹல்காம் உள்பட  16 சுற்றுலா தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் மட்டும் முதல் கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து