முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் 20 மணி நேர விசாரணை நிறைவு

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      தமிழகம்
Jayaram 2025-06-16

Source: provided

சென்னை : சிறுவன் கடத்தல் வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமண விவகாரத்தில் திருமணம் செய்து கொண்ட இளைஞரின் சகோதரரான 15 வயது சிறுவனை கடத்திய வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வழக்கின் விசாரணையில், இந்த கடத்தல் வழக்கில் ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. எச்.எம்.ஜெயராமுக்கு தொடர்பு இருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியதையடுத்து அவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, ஆயுதப்படை ஏ.டி.ஜி.பி. எச்.எம்.ஜெயராம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திருவாலங்காடு காவல் நிலையத்தில் நேற்று  ஏ.டி.ஜி.பி. ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று முன்தினம் மாலை தொடர்ந்த விசாரணை நேற்று  மாலை வரை நடைபெற்றது. சுமார் 20 மணி நேரம் விசாரணை நடைபெற்றதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் தொடர்புடைய எம்.எல்.ஏ. பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயராமை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் நேற்று காலை உத்தரவிட்டார்.

தன்னை கைது செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் தாக்கல் செய்துள்ள மனு இன்று (ஜூன் 18) விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து