எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பால் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் மேலும் தள்ளிப்போகியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஆக்சியம் ஸ்பேஸ் என்னும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம் -4' விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டு உள்ளது. பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் 3 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்கின்றனர்.
இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு ராக்கெட் தயார் நிலையில் உள்ளது. இந்த ராக்கெட் கடந்த மாதம் 29-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் சில தொழில்நுட்ப பணிகளுக்காக ராக்கெட் ஏவுதலை கடந்த 8-ம் தேதிக்கு மாற்றி வைத்தனர். இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக மீண்டும் தேதி மாற்றப்பட்டு கடந்த 10-ம் தேதி மாலை 5.52 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதற்கான நாள் நெருங்கி வந்தபோது, ராக்கெட் என்ஜினில் திரவ ஆக்சிஜன் கசிவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்தனர். இதனால் கடந்த 11-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 19-ம் தேதி ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு மேற்கொள்ள இருந்த பயணம் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி சரியாக மதியம் 1.12 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மீண்டும் மீண்டும் இந்த திட்டம் தள்ளிவைக்கப்படுவதால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் விண்வெளி வீரர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


