முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திலும் கரை ஒதுங்கிய துடுப்பு மீன்கள்: மக்கள் அச்சம்

வியாழக்கிழமை, 19 ஜூன் 2025      தமிழகம்
Fisher-Man 2025-02-20

Source: provided

சென்னை: இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியாகக் கருதப்படும் துடுப்பு மீன்கள் தமிழகம் உள்பட 4 இடங்களில் கரை ஒதுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டு நம்பிக்கையின்படி, மிகவும் அரிதான துடுப்பு மீன்கள், காடற்கரையோரம் தென்படுவதே இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறி என்ற நிலையில், கடந்த 20 நாள்களில் உலகின் நான்கு இடங்களில் கரைஒதுங்கியருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டூம்ஸ்டே என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இந்த துடுப்பு மீன்கள் மிக நீளமாகவும் பட்டையாகவும் இருக்கின்றன. இவை ஆழ்கடல் வாழ் மீன்கள் என்பதால் இவற்றை கரையோரங்களில் பார்ப்பதே அரிது என்று கூறப்படுகிறது.

இது அண்மையில் தமிழகக் கடற்கரையில் மீனவர்களிடம் பிடிபட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே, இந்த மீன் பற்றிய நம்பிக்கையை அறிந்த மீனவர்களும் உள்ளூர் மக்களும் அச்சமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அரிய வகை துடுப்பு மீனை ஏழுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கையிலேந்தி வரும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்தான் இந்த மீனைப் பற்றிய தகவல்களும் வெளியாகியிருக்கிறது.

பாம்புகள் போல கடலுக்கு அடியில் சென்றுகொண்டிருக்கும் இவை எப்போதாவது கரையோரம் தென்பட்டால், ஆழ்கடலில் ஏதேனும் பேரழிவு அல்லது இயற்கைப் பேரழிவு நேரிடும் என்று நம்பப்படுகிறது.  ஆனால், இவை உடல்நலம் இழக்கும்போதும், வயதாகும்போதும் கடலில் நீந்த முடியாமல்தான் கரை ஒதுங்குவதாகவும் அல்லது சில நேரங்களில் கடலில் ஏற்படும் மாற்றத்தால் மீன்கள் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்குவது நேர்ந்தால், அப்போது இயற்கைப் பேரழிவுக்கான அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து