முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு: கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூன் 2025      ஆன்மிகம்
Mdu 2025-06-22

Source: provided

மதுரை : மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று  முருக பக்தர்கள் மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது

உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெற்றது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். நேற்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து