முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் நிறுத்த அறிவிப்பு: அதிபர் ட்ரம்புக்கு அழுத்தம் கொடுத்த 3 முக்கிய நபர்கள்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூன் 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

வாஷிங்டன் : ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்த அறிவிப்பு நடவடிக்கையை தமது அரசின் அதி உயர் முக்கிய அதிகாரிகளிடம் கூட ஆலோசிக்காமல் அதிபர் டிரம்ப் ரகசியமாக வைத்திருந்த விவரம் வெளியாகி இருக்கிறது.

ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையே கடந்த 12 நாட்களாக நீடித்த யுத்தம், அமெரிக்காவின் முயற்சியால் தற்போது போர் நிறுத்தமாக கைகூடி உள்ளது. சண்டை போட்டுக் கொண்ட இருநாடுகள் அறிவிப்பதற்கு முன்னதாகவே, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முதலில் மறுத்த ஈரான் பின்னர் டிரம்ப் அறிவிப்பை வழிமொழிய, இஸ்ரேலோ ஒருபடி மேலே சென்று நன்றியையும் தெரிவித்துக் கொண்டது. 12 நாட்களாக நீடித்த இந்த யுத்தம், டிரம்பின் ஒரேயொரு போர் நிறுத்த அறிவிப்பு என்ற பதிவின் மூலம் எப்படி சாத்தியமானது? டிரம்பின் அறிவிப்புக்கு முன்னர் நடந்த அரசியல் கள நிலவரங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

மிக முக்கியமான, உலக நாடுகள் அனைத்தும் அத்தனை அலுவல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஈரான், இஸ்ரேல் சண்டையையும், அதன் போக்கிலான முன்னேற்றங்களையும் உற்று நோக்க ஆரம்பித்து இருந்தது. இப்படியான அரசியல் கால சூழலில் காற்றில் அசைந்தாடும் ஆலமர விழுதுகள் போல் போர்ச்சூழல் அங்கிங்கும் இங்கும் ஆடிக் கொண்டு இருந்தன. போர் நிறுத்த அறிவிப்புக்கு எடுத்த நடவடிக்கைகள் அவரது அரசின் அதி உயர் பொறுப்பு வகிக்கும் முக்கிய அதிகாரிகளிடம் கூட விவாதிக்காமல் டிரம்ப் சஸ்பென்ஸாக வைத்திருந்து இருக்கிறார். துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோப் ஆகியோர் உதவியால் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழுத்தம் கொடுத்துள்ளார். இவர்கள் மூன்று பேரும், ஈரானிடம் நேரடி மற்றும் மறைமுக வழிகளில் போர் நிறுத்தம் செய்யும் வழிகளை கையாண்டு இருக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து