முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடல்

சனிக்கிழமை, 28 ஜூன் 2025      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி :  சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்தியாவின் குரூப் கேப்டன்சுபான்ஷூ சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். 

அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “குரூப் கேப்டன்சுபான்ஷூ சுக்லா உடனான உரையாடல் அற்புதமாக இருந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவர் தனது அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டார். அந்தச் சிறப்புக் கலந்துரையாடலை நீங்களும் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உரையாடலின்போது, “நீங்கள் இந்தியாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறீர்கள்... ஆனால், இந்தியர்களின் மனதில் மிக நெருக்கம் கொண்டுள்ளீர்கள். உங்களின் இந்த வரலாற்றுப் பயணம், விண்வெளி ஆய்வு மாணவர்களின் உத்வேகத்தைக் கூட்டும்” என்றுசுபான்ஷூ சுக்லாவிடம் பிரதமர் மோடி கூறினார்.

அப்போது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியை பார்க்கும்போது உணர்ந்த தருணத்தை பிரதமர் மோடியிடம் விவரித்தசுபான்ஷூ சுக்லா, “பூமி முழுவதும் எல்லைகள் ஏதுமின்றி ஒன்றாகத் தெரிகிறது. நாம் வரைபடத்தில் பார்ப்பதைக் காட்டிலும் இந்தியா மிகவும் பெரிதாகத் தெரிகிறது” என்று வியப்பு மேலிட பகிர்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து