முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவர் ஒரு போர் வீரர்: நெதன்யாகுவை புகழ்ந்த ட்ரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூன் 2025      உலகம்
Tramp 2025-06-29

Source: provided

வாஷிங்டன் : இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு செய்வது மிகவும் கொடூரமானது. அவர் ஒரு போர் வீரர்' என வழக்கு விசாரணைக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது லஞ்சம், ஊழல், நம்பிக்கை மீறல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு மீது நடைபெற்று வரும் ஊழல் வழக்கு விசாரணைக்கு அதிபர் ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து, ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இஸ்ரேலில் பிரதமர் நெதன்யாகுவுக்கு அவர்கள் செய்வது மிகவும் கொடூரமானது. அவர் ஒரு போர்வீரர், ஈரானில் உள்ள ஆபத்தான அணுசக்தி அச்சுறுத்தலை அகற்றுவதில் அமெரிக்கா உடன் இணைந்து பணியாற்றி அற்புதமான பணியைச் செய்த பிரதமர்.

முக்கியமாக, அவர் இப்போது ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் பிணைக்கைதிகளை திரும்பப் பெறுவதும் அடங்கும். இஸ்ரேலின் பிரதமரை நாள் முழுவதும் நீதிமன்ற அறையில் உட்கார வைப்பது எப்படி சாத்தியம். இது ஒரு அரசியல் சூனிய வேட்டை. 'நீதி'யின் இந்த கேலிக்கூத்து ஈரான் மற்றும் ஹமாஸ் பேச்சுவார்த்தைகளில் தலையிடும்.

இஸ்ரேலைப் பாதுகாக்கவும், ஆதரிக்கவும், அமெரிக்கா ஒரு வருடத்திற்கு பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறது. வேறு எந்த நாட்டிற்கும் செலவிடுவதைவிட மிக அதிகம். பிரதமர் நெதன்யாகு தலைமையில் நாம் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றோம். இந்த வழக்கு விசாரணைகள் நமது வெற்றியைப் பெரிதும் கெடுக்கிறது. அவர் (நெதன்யாகு) செய்ய வேண்டிய ஒரு பெரிய வேலை இருக்கிறது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து