முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19-வது தேசிய புள்ளியியல் தின விழா: வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      தமிழகம்
DCM-1-2025-06-30

சென்னை, 19 வது தேசிய புள்ளியியல் தின விழாவில் சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (30.6.2025) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன கூட்டரங்கில் நடைபெற்ற 19 வது தேசிய புள்ளியியல் தின விழாவில், தரவுகளின் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயார் செய்யும் போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் புள்ளியியல் சார்ந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி அளிப்பதற்காக பொருள்இயல் மற்றும் புள்ளியியல் துறை - தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இடையே தமிழ்நாடு துணை முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு., இந்திய புள்ளியியல் துறையின் தந்தை என்று போற்றப்படுகிற பேராசிரியர் பி.சி.மஹாலநோபிஸ் அவர்களுடைய பிறந்தநாளை தேசிய புள்ளியியல் நாளாக கொண்டாடுகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற இந்த வாய்ப்பை பெற்றதற்கு நான் மீண்டும் மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

முதல்-அமைச்சர் அறிவிக்கின்ற திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு எந்த அளவுக்கு சென்று சேருகின்றது, பயன்படுகிறது. மக்களுடைய வாழ்வில் அது எப்படிப்பட்ட மாற்றத்தை சிறப்பான மாற்றத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இதை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு இந்த அரசுக்கு, முதல்வருக்கு நீங்கள் தான் துணை நிற்கின்றீர்கள். அதற்கு இந்த நேரத்தில் என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உதாரணத்திற்கு, முதல்-அமைச்சருடைய காலை உணவுத் திட்டம், அந்த திட்டத்தில் மாணவர்களுடைய வருகைப்பதிவு எந்த அளவுக்கு உயர்ந்து உள்ளது, என்பது இந்த புள்ளியியல் துறை எடுத்த ஆய்வு மூலம் தான் நம்முடைய அரசுக்கு தெரிய வந்தது. அதேபோல, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பெறப்பட்ட மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் உங்களால் ஆய்வு செய்யப்பட்டு உரிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த திட்டத்துடைய வெற்றிக்கும் இந்த துறை மிக, மிக முக்கியமான ஒரு காரணம்.

அதுமட்டுமல்ல, புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டங்களில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் எப்படி அதிகமானது. அதே மாதிரி, விடியல் பயணம் திட்டத்தினால் ஒவ்வொரு மகளிரும் மாதம் கிட்டத்தட்ட 900 ரூபாய் சேமிக்கிறாங்க அப்படிங்கிறதையும், இந்த துறை தான் ஆய்வு பண்ணி கண்டுபிடித்து சொன்னது. அதுமட்டுமல்ல, விவசாயக் கூலி விவரங்களில் தொடங்கி மாநிலத்தினுடைய தொழில் வளர்ச்சி குறியீடுகள் வரை உங்களுடைய தரவுகள் தான் இந்த அரசுக்கு ஒரு அளவுகோலாக இன்றைக்குவரை திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைக்கு நாம் திராவிட மாடல் என்று பெருமையோடு சொல்லி கொள்கிறோம், அதற்கான அடிப்படைகள் எல்லாமே இந்த புள்ளிவிவரங்களை வைத்து தான் பெருமையோடு சொல்கின்றோம். ஏதோ போகிறபோக்கில் வார்த்தை ஜாலத்திற்காக 'திராவிட மாடல்' என்று நாம் சொல்லவில்லை. எல்லாத்தையும் புள்ளிவிவரத்தோடு ஆதாரத்தோடு தான் இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

சமூகத்துடைய அனைத்துத்துறை வளர்ச்சிக்கும் நம்முடைய புள்ளியியல் துறையினுடைய பங்கு மிக, மிக முக்கியமானது. அப்படிப்பட்ட முக்கியமான துறையைச் சேர்ந்த அனைத்து உயர் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும், அதேபோல் புள்ளியியல் துறையில் உலகளவில் வருகின்ற புதிய ஆய்வுகளை உள்வாங்கிக் கொண்டு, நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மென்மேலும் வளர்ச்சியடைய இந்த துறையை சார்ந்த அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து