முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஞ்சா - புகையிலை விற்பனை: திருப்பூரில் துப்பாக்கிகளுடன் பீகாரை சேர்ந்தவர்கள் கைது

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      இந்தியா
Gun 2023 04 17

திருப்பூர், கஞ்சா-புகையிலை விற்பனை செய்த பீகாரை சேர்ந்த இருவர் திருப்பூரில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாநகரப் பகுதி முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பது குறித்து தனிப்பிரிவு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக குப்பாண்டம்பாளையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி உள்ள பகுதியில் நேற்று காலை சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, 300 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

தொடர்ந்து, நடைபெற்ற சோதனையில் ஒரு வீட்டில் பையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகிர் அன்வர்(30), ரவிராஜா (25) ஆகியோர் பீகாரிலிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கி வந்துள்ளனர். இங்கு அந்த துப்பாக்கியை ரூ.50 ஆயிரம் வரை விலை பேசி விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்ததாக தெரிவித்தனர். இரண்டு துப்பாக்கிகளை கைப்பற்றிய போலீஸார் இருவரையும் கைது செய்தனர். மேலும், இந்த துப்பாக்கியை யாருக்கு விற்பனை செய்ய வைத்திருந்தார்கள் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைத்துப்பாக்கியுடன் பீகாரைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து