முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் நீக்கம் ஏன்..? - கேப்டன் சுப்மன் கில் பதில்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      விளையாட்டு
Subman-Gill 2023 07 31

Source: provided

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பும்ரா, குல்தீப் இடம் பெறாதது குறித்து கேப்டன்

சுப்மன் கில் விளக்கமளித்துள்ளார்.

சுற்றுப்பயணம்... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

இங்கி. பந்துவீச்சு...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், நிதிஷ் குமார் ரெட்டி இடம் பிடித்தனர். இந்த போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இடம் பெறாதது ஏன்? 

இந்நிலையில், இந்த போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன் என்பது குறித்து கேப்டன் கில் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நாங்களும் முதலில் பவுலிங் செய்யவே தீர்மானித்திருப்போம். இந்த பிட்ச்சில் ஏதேனும் சவால் இருந்தால் அது முதல் நாளாக இருக்கும். எங்களுடைய அணியில் 3 மாற்றங்கள் செய்கிறோம். நிதிஷ் ரெட்டி, சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் வருகிறார்கள். பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு பும்ரா விளையாடவில்லை.

பயன்படுத்துவோம்... 

அடுத்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அங்கே அவரை நாங்கள் அதிகம் பயன்படுத்துவோம் என்று நினைக்கிறோம். இந்தப் போட்டிக்கு முன்பாக நல்ல இடைவெளி கிடைத்தது. இது எங்களுக்கு முக்கியமான போட்டி. குல்தீப் யாதவை விளையாட வைக்க ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் கடந்தப் போட்டியை பார்க்கும் போது எங்களுடைய லோயர் ஆர்டர் நன்றாக விளையாடவில்லை. எனவே பேட்டிங் வரிசையை ஆழப்படுத்த முடிவெடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து