முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்து சச்சினை முந்திய சுப்மன் கில்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

பர்மிங்காம் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். 

587 ரன்கள் குவிப்பு...

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில்  தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 

சுப்மன் கில் 269 ரன்....

அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 18 ரன்களுடனும் , ஹாரி புரூக் 30 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

குறைந்த வயதில்....

முன்னதாக இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்லின் தற்போதைய வயது 25 ஆண்டு 298 நாட்கள். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் சதம் அடித்த 2-வது இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சச்சின் (26 ஆண்டு 189 நாட்கள்) 2-வது இடத்தில் இருந்தார்.

குறைந்த வயத்தில் சதம்:

1. மன்சூர் அலிகான் பட்டோடி - 23 ஆண்டு 39 நாட்கள்

2. சுப்மன் கில் - 25 ஆண்டு 298 நாட்கள்

3. சச்சின் - 26 ஆண்டு 189 நாட்கள்

4. விராட் கோலி - 27 ஆண்டு 260 நாட்கள் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து