முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்

சனிக்கிழமை, 5 ஜூலை 2025      தமிழகம்
Prashant-Kishore 2024-11-02

சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.  

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், அடுத்த தேர்தலில் போட்டியிடுகிறார். தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி கிடையாது என்று நேற்று முன்தினம் நடந்த செயற்குழுவில் வெளிப்படையாக அறிவித்துள்ள விஜய், கூட்டணி ஆட்சிக்கு தயாராக இருப்பதாகவும் ஏற்கனவே கூறி இருக்கிறார்.

சென்னையில் பிப்ரவரியில் நடந்த கட்சியின் விஜய் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில், தேர்தல் பிரசார உத்திகளை வகுக்கும் நிபுணரான பிரசாந்த் கிஷார் பங்கேற்றார். அப்போது 'விஜய் தமிழகத்தின் புதிய நம்பிக்கை' என்றும் கூறினார்.

இந்நிலையில், தமிழக தேர்தலில் பிரசாந்த் கிஷோருக்கு ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. பீகார் மாநில தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவரது கவனம் முழுவதும் அங்கு தான் இருக்கிறது. அது மட்டுமின்றி, தமிழகத்தில் விஜய் எடுத்த கூட்டணி தொடர்பான நிலைப்பாடுகளில், பிரசாந்த் கிஷோர் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் இருந்து பிரசாந்த் கிஷோர் வெளியேறி விட்டார். அவரது சார்பில் தமிழகத்தில் விஜய் கட்சிக்காக பணியாற்றிய 30 பேரும், zமீபத்தில் விலகிக்கொண்டு விட்டனர். அவர்களில் ஒரு சிலர், நேரடியாக ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்ஸ்' நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற தொடங்கியுள்ளனர்.

'நான் பீகார் தேர்தல் பணியில் மும்முரமாக இருக்கிறேன். விஜய்க்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடலாமா, வேண்டாமா என்று நவம்பர் மாதத்துக்கு பிறகே முடிவு செய்வேன்' என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து