முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் நோய்க்கு 17 பேர் பலி : பொதுமக்கள் அதிர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      இந்தியா
Dog

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 5 மாதங்களில் ரேபிஸ் தாக்குதலில் 17 பேர் பலியான சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் தெருநாய்க்கடி, ரேபிஸ் தாக்குதலைத் தொடர்ந்து சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்தை போன்றே கேரளாவிலும் தெருநாய்க் கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவோரின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல உயர்ந்து வருகிறது.

அம்மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 17 பேர் ரேபிஸ் தாக்கி பலியாகி உள்ளனர். அதிலும், தெரு நாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,65,136 பேர் ஆகும். இந்த விவரங்கள் அனைத்தும் சமூக ஆர்வலர் ராஜூ என்பவரின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளி வந்துள்ளது.

குறிப்பாக எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டுமே 9,619 பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போல, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களிலும் நாய்க்கடிக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆலப்புழா மாவட்டத்தில் மட்டும் 4 பேர் ரேபிஸ் தாக்கி பலியாகி உள்ளனர். கொல்லம், மலப்புரம் மாவட்டங்களில் தலா 3 பேரும், எர்ணாகுளம், கோழிக்கோடு, திருவனந்தபுரம் மாவட்டங்களில் தலா ஒருவரும் ரேபிஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, தெருநாய்களை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை முறைகள் பற்றிய விழிப்புணர்வை மிஷன் ரேபிஸ் என்ற தன்னார்வ அமைப்பின் விரைவில் செயல்படுத்த சுகாதாரத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து