முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      இந்தியா
Otisha 2025-06-29

Source: provided

பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கோப்பையை ஆர்.சி.பி. அணி வென்றதையடுத்து, பெங்களூரில், வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம், முழுமையாக விசாரணை நடத்தி முடித்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தனது விசாரணை அறிக்கையை, கா்நாடக முதல்வா் சித்தராமையாவிடம் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை சரியான முறையில் நடத்த முடியாது என்று நன்கு அறிந்திருந்தும், கர்நாடக கிரிக்கெட் கழகம், ஆர்.சி.பி. அணி, கர்நாடக காவல்துறை என அனைத்துமே அதனை நடத்துவதற்கு திட்டமிள்ளனர். இந்த நிகழ்ச்சி நடைபெற திட்டமிட்ட இடத்தில், எந்த முன்னேற்பாடுகளும், பாதுகாப்பும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் கையாளப்படவில்லை. ஒருமாத காலமாக, நேரில் பார்த்தவர்களிடம் பெற்ற வாக்குமூலம், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு நடத்திய விசாரணையின் மூலம், விசாரணை ஆணையத்துக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது, அதுதான், பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் மிக மோசமான அலட்சியம். ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்ட விளையாட்டு அரங்குக்குள் வெறும் 79 காவலர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியே ஒருவரும் நிறுத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து