முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை தமிழ்நாடு அரசு பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2025      தமிழகம்
TN-Assembly 2024-12-04

Source: provided

சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15 கோடி மகளிர் பயன் பெற்றுள்ளதாகவும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 14,45,109 வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தன்மை வாய்ந்த இத்திட்டங்கள், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம், ஊரகம், நகர்ப்புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மக்கள் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் முன்னேற்றம், திட்டமிடப்பட்ட இலக்கினை அடைவதை உறுதி செய்வதன் மூலம், அவற்றை உரிய காலத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர ஆவன செய்வதே இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையின் முக்கியப் பணியாகும்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு, அவரது கடும் உழைப்பின் மூலம் சிறப்பான பல வெற்றிக் கனிகளைப் படைத்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 2,59,072 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தொடர்பான குறுகிய காலத் திறன் பயிற்சிகளை வழங்கியுள்ளது.

முன்கற்றல் அங்கீகாரம் என்பது, அனுபவத்தின் மூலம் பெற்ற திறனை அங்கீகரித்தல் ஆகும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல முகாம்களை நடத்தி கட்டுமானத் துறை, தளவாடம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்(SME), தோல் மற்றும் நூல் தொழில் துறைகள் ஆகியவற்றில் வேலை செய்யும் 1,13,940 தொழிலாளர்களுக்கு முன் கற்றல் அங்கீகார (RPL) சான்றிதழ்களை வழங்கியுள்ளது.

கல்விக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் திட்டமே நான் முதல்வன் திட்டம். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளன்று, அவர்களால் தொடங்கப்பட்ட இந்த நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மாற்றியமைக்கக்கூடிய ஒரு மாபெரும் வெற்றித் திட்டமாக இளைஞர்களுக்குப் பயனளித்து வருகிறது. மொத்தமாக, இத்திட்டத்தின் கீழ் 41,38,833 மாணவர்களும், 1,00,960 விரிவுரையாளர்களும் பயிற்சி பெற்றுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு ஆண்டுகளில், 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 2,60,682 மாணவர்களில் 63,949 மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். உயர்கல்வி படிப்பதற்குப் பாலம் அமைக்கும் உயர்வுக்குப்படி (பள்ளிகள்) 2023 மற்றும் 2024 “நான் முதல்வன் உயர்வுக்குப்படி ”திட்டம் 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர வழிவகை செய்துள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து