முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்முறையாக இங்கி.,க்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்று இந்திய அணி சாதனை

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      விளையாட்டு
Cricket-2025-07-10

லண்டன், இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்று இந்திய மகளிர் அணி சாதனைவென்ற சாதனை படைத்துள்ளது.

126 ரன்கள்... 

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய மகளிரணி 4-ஆவது டி20 போட்டியில் நேற்று முன்தினம் இரவு விளையாடியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 126/7 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா 22 ரன்கள் அடுத்தார். இந்தியாவின் சார்பில் ராதா யாதவ், ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

தொடரை வென்றது...

அடுத்து விளையாடிய இந்திய மகளிரணி 17 ஓவர்களில் 127/4 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 32 ரன்கள் எடுத்தார். 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 3-1 என வென்று தொடரை இந்திய மகளிரணி முதல்முறையாக வென்றுள்ளது. கடைசி டி20 ஜூலை 12ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அடுத்ததாக ஒருநாள் போட்டிகள் ஜூலை 16-இல் தொடங்குகின்றன.

முதல் முறையாக...

சொந்த மண்ணிலும் சரி இங்கிலாந்திலும் சரி இதற்கு முன்பாக இந்திய மகளிரணி இங்கிலாந்து மகளிருக்கு எதிராக விளையாடிய 6  டி20 தொடர்களில் தோல்வியுற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று வெற்றிக்கு இந்திய மகளிருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மகளிரணியினர் விடியோவை பி.சி.சி.ஐ. வுமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து