Idhayam Matrimony

விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'

புதன்கிழமை, 16 ஜூலை 2025      சினிமா
Thalaivan-Thalaivi 2025-07-

Source: provided

சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில்  விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும் படம் தலைவன் தலைவி. இந்த திரைப்படம் ஜூலை 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதை ஒட்டி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ''மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். பின்னர் இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில்,  ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் – பேரரசி. ஆகாச வீரன் சிரிக்க வைப்பான்.. அழ வைப்பான்... டார்ச்சர் செய்வான்... இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாத ஒருவன். கணவன்- மனைவி சண்டையை டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி என்று சொல்லலாம். கணவன் மனைவி சண்டை படம் பார்க்கும் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து