முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: தேஜஸ்வி யாதவ் புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      இந்தியா
Election-Commision 2023-04-20

பாட்னா, பீகார் வாக்காளர் பட்டியலில்  தன்னுடைய பெயரை காணவில்லை என்று தேஜஸ்வி யாதவ் புகாருக்கு தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

 பீகார் வாக்காளர் பட்டியலில் சட்டவிரோத வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பார்லிமென்டில் இதை முன்னிறுத்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இந்த நிலையில், பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து அவர் கூறியதாவது; ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்காளர்கள் வரையில் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பபட்டுள்ளது. பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

அதேவேளையில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர், பூத் எண் மற்றும் வாக்காளர் எண் போன்ற விபரங்களை கொடுக்காததால், நீக்கப்பட்டவர்களின் விபரங்களை கண்டறிய முடியவில்லை.என்னுடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அப்புறம் எப்படி நான் தேர்தலில் போட்டியிட முடியும்?, என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆனால், அவரது குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், திஹா தொகுதியின் வாக்காளர் பட்டியலின் 416வது எண்ணில் தேஜஸ்வியின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பதிலளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து