முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோ ரூட்டை வம்பிழுப்பது எங்களது திட்டத்தில் இருந்தது: பிரசித் கிருஷ்ணா

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Jadoo

Source: provided

லண்டன் : இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுள் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

சொதப்பிய இங்கிலாந்து...

ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட்டில் வென்று தொடரை சமம்செய்ய இந்தியா முனைப்புடன் இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 224க்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 247க்கு ஆட்டமிழந்தது. தற்போது, இந்திய அணி 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் நல்ல நிலையில் இருந்தும் சொதப்பியது.

மகிழ்ச்சியாக...

இந்தப் போட்டியில் ஜோ ரூட்டிடம் பிரசித் கிருஷ்ணா 22ஆவது ஓவரில் வம்பிழுத்துக் கொண்டே இருந்ததால் நடுவர் தலையிடும்படி ஆனது. பின்னர் ரூட் விரைவில் ஆட்டமிழந்தார். இது குறித்து பிரசித் கிருஷ்ணா கூறியதாவது: இது சிறிய விஷயம் தான். எங்களுக்கு உள்ளாக இருக்கும் போட்டி மனப்பான்மை வெளியே வந்தது அவ்வளவுதான். களத்துக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள். இந்த மோதலை நாங்கள் இருவருமே மகிழ்ச்சியாக எதிர்கொண்டோம்.

திட்டத்திலே இருந்தது...

ஜோ ரூட்டை வம்பிழுப்பது எங்களது திட்டத்திலே இருந்தது. ஆனால், நான் பேசியதற்கு அவர் அப்படி எதிர்வினை ஆற்றுவாரென நினைக்கவில்லை. எனக்கு அவரை எப்போதும் பிடிக்கும். அவர் கிரிக்கெட்டின் ஒரு லெஜெண்ட் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து