முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? - அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Anbil 2025-06-29

Source: provided

திருச்சி : சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு எப்படி வளரும்? என அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் திருச்சி மண்டலம் மூலம் திருச்சி மாநகரின் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் நேற்று முன்தினம் புதிய தாழ்தள சொகுசு பஸ் சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம் என்ற புதிய கல்விக் கொள்கை அறிவிப்பு பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவை எப்படி வளர்க்க முடியும்? என்று தெரிவித்தார்.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்று கூறப்படும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தின் கீழ் நாடு முழுவதும் ஏராளமான பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவ-மாணவிகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்ட வடிவமைப்பு அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்களும் அதில் இணைக்கப்படு கின்றன. சில தேவையற்ற பாடக்குறிப்புகள் எடுக்கப்படும் போது அது சர்ச்சையாகும் சூழலும் ஏற்படுகிறது. 

இதேபோல் மாணவர்களின் தேர்வு சுமையை குறைக்கவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதில் ஒரு பகுதியாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு கல்வி ஆண்டில் இரண்டு முறை அதாவது, ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவதை இறுதி முடிவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு நடைமுறையில் சில மாற்றங்களை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தவகையில், 9-ம் வகுப்பில் திறந்த புத்தக மதிப்பீடுகளை ஒருங்கிணைக்கும் புதிய திட்டத்திற்கு சி.பி.எஸ்.இ. வாரியத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் நிர்வாகக்குழு ஒப்புதல் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து