முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவை கிண்டலடிப்பதா? - பார்லி.யில் இலங்கை எம்.பி. ஆதங்கம்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      உலகம்
Sri-Lanka 2024-03-25

Source: provided

இலங்கை : இந்தியாவை கிண்டலடிப்பதா என இலங்கை எம்.பி. சில்வா பாராளுமன்றததில் கோள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதித்திருப்பது குறித்து இலங்கை பாராளுமன்றத்தில் பேச்சு எழுந்தபோது, இந்தியாவை கிண்டலடிப்பதா, நம்முடைய மோசமான நேரத்தில் உதவியதே இந்தியாதான் என எம்.பி. டி சில்வா பேசியுள்ளார்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சுவார்த்தை சிக்கலில் இருக்கும் நிலையில், அமெரிக்காவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது குறித்து இலங்கை எம்.பி.க்கள் சிலர் கிண்டலடித்துப் பேசியதாகவும், அதனைக் கேட்ட எம்.பி. ஹர்ஷா டி சில்வா அவர்களைக் கண்டித்ததாகவும், இந்தியாவை கிண்டலடிப்பதா? அவர்கள் மோசமான நிலையில் இருக்கும்போது அவர்களை கிண்டலடிக்கக் கூடாது. ஏனென்றால், நாம் மிக மோசமான நிலையல் இருந்தபோது கைது கொடுத்து உதவியது இந்தியாதான் என்று டி சில்வா பேசியிருக்கிறார்.

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கு 25 சதவீத வரி மற்றும் அபராதத்தை விதித்திருந்தார். அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, மேலும் 25 சதவீத வரியை விதித்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்த நிலையில்தான், இலங்கையின் சமாகி ஜன பலவேகயா கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான டி சில்வா, பாராளுமன்றத்தில் இந்தியாவுக்காகக் குரல் கொடுத்துள்ளார்.

இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ உதவியும், ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கியிருந்தது, உடனடி உதவிகளோடு, பல்வேறு வகையிலும் நிதியுதவி, கடனுதவி என்று உதவிக்கொண்டே இருந்தது. கடனை தள்ளுபடி செய்வது, மேற்கொண்டு கடன் வழங்குதல் என அனைத்து நிலைகளிலும் உதவியிருக்கிறது. 

இந்தியாவின் நிதியுதவி என்பது குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. பெட்ரோல் முதல், பேருந்து மற்றும் பல்வேறு சேவைகளை வாரி வழங்கியது. தற்போது இந்தியாவுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கும் காலம். எனவே, இந்தியாவை கிண்டலடித்துப் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து