முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர்: வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுலுக்கு பெருகும் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      இந்தியா
Rahul-Gandhi-2024-08-22

Source: provided

டெல்லி : வாக்கு திருட்டு விவகாரத்தில் 24 மணிநேரத்தில் 25 லட்சம் பேர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தோ்தலில் தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் மத்தியில் ஆளும் பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில நாள்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக சில ‘ஆதாரங்களையும்’ வெளியிட்டாா். அதேநேரம், ராகுல் வெளியிட்ட தரவுகள் தவறானவை என்று தோ்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே, டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை உடனடியாக வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். மேலும், ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டத்தில் பங்கேற்று, http://votechori.in/ecdemand என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் 9650003420 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி கோரிக்கை விடுத்த 24 மணிநேரத்தில் மட்டும் 15 லட்சம் பேர் ஆதரவு சான்றிதழை பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், 10 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலம் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து