முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹர்மன்ப்ரீத் கவுர் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Harmanpreet-Kaur 2023-07-23

Source: provided

13வது மகளிர் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு இன்னும் 50 நாட்கள் மட்டுமே இருப்பதை குறிக்கும் கவுண்ட்டவுன் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் ஐ.சி.சி. தலைவர் ஜெய்ஷா, தலைமை செயல் அதிகாரி சஞ்ஜோக் குப்தா, இந்திய முன்னாள் வீரர் யுவராஜ்சிங், முன்னாள் வீராங்கனை மிதாலிராஜ், இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டன் மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது, உள்ளூர் ரசிகர்களின் முன் விளையாடுவது எப்போதும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறை எங்களது 100 சதவீத பங்களிப்பை வழங்கி தடைகளை தகர்த்தெறிந்து கோப்பையை கையில் ஏந்துவோம் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த தருணத்துக்காகத்தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். உலகக் கோப்பை போட்டிகள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவை. அதில் தேசத்துக்காக விசேஷமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

________________________________________________________________________________________________

ரொனால்டோவுக்கு திருமணம்

கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கிறிஸ்டியோனோ ரொனால்டோ கருதப்படுகிறார். ரொனால்டோ கால்பந்து மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வரும் நிலையில், விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார். இவர் 2015-ம் ஆண்டு வரை இரினா ஷாய்க் என்ற பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தார். இரினாவுடனான ஐந்து வருட தொடர்பை முறித்துக் கொண்ட பின் அதன்பின், 2016-ல் இருந்து ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் என்பவருடன் பழக தொடங்கினார்.

தற்போது வரை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடன் தான் ரொனால்டோ வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்யாமல் வாழ்ந்து வரும் ரொனால்டோ - ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தம்பதிக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தனது நீண்டநாள் காதலி ஜார்ஜினாவை கிறிஸ்டியானோ ரொனால்டோ திருமணம் செய்துகொள்ளவுள்ளார். விலையுயர்ந்த வைர மோதிரத்துடன் ஜார்ஜினாவுக்கு, ரொனால்டோ பிரப்போஸ் செய்துள்ளார். இந்த மோதிரம் 10 முதல் 15 காரட் வரை இருக்கலாம் என்றும் அதன் விலை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

________________________________________________________________________________________________

டெவால்டு பிரெவிஸ் முதல் சதம்

தென்னாப்பிரிக்க வீரர் டெவால்டு பிரெவிஸ் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை நிறைவு செய்துள்ளார். ஆஸி.க்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 41 பந்தில் அதிரடியாக இந்தச் சதத்தை நிறைவு செய்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில் பிரெவிஸ், ஸ்டப்ஸ் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். ஸ்டப்ஸ் 31 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரெவிஸ் 103 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

தெ.ஆ. அணியில் அதிவேகமாக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். பேபி ஏபிடி என்பதனை நிரூபித்து வருகிறார். 16.2 ஓவர்களில் தெ.ஆ. அணி 183/4 ரன்கள் எடுத்துள்ளது. தனியாளாக அணியை பிரெவிஸ் தூக்கி நிறுத்தினார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்த பிரெவிஸுக்கு தென்னாப்பிரிக்க அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து