முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வு: விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் மேலும் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Engg 2023-07-13

Source: provided

சென்னை : இளநிலை பொறியியல் படிப்புக்கான துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது: 12-ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி  பயின்று சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025-26 பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறிய மாணவர்கள், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கை பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

துணைக் கலந்தாய்வில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்று (12.08.2025) வரை வழங்கப்பட்டிருந்தது. இந்த துணைக் கலந்தாய்வில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தங்களது விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ள ஏதுவாக, மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஆக. 14 வரை விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொறியியற் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை (TFC Centres) தொடர்பு கொள்ளலாம். மேலும், 1800-425-0110 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வாயிலாகத் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து