முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளிக்கு பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தேதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Train-2023-05-01

சென்னை, சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால், ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான தேதி நெருங்கிவிட்டது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதுவும் திங்கள்கிழமையில் வருகிறது.

எனவே, தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வோர் அதற்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். அல்லது வார விடுமுறை இருப்பவர்கள் வெள்ளிக்கிழமை அல்லது ஒரு நாள் கூடுதலாக விடுப்பு எடுத்து வியாழக்கிழமையும் ரயிலில் பயணிக்கலாம். அந்த வகையில், அக்டோபர் 17ஆம் தேதி ரயிலில் பயணிக்க, ஆகஸ்ட் 16-ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது. அக்டோபர் 18-ம் தேதி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆகஸ்ட் 17-ம் தேதி முன்பதிவு தொடங்குகிறது.

எனவே, தீபாவளிக்கு முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை அதற்கும் ஒரு சில நாள்கள் முன்னதாக ரயிலில் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் இன்று முதலே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். தொடா் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களில் அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பா் 17 முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை ஊா் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவா்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். இதற்கான கட்டண சலுகை பயணச்சீட்டை வரும் 14-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அக்டோபா் 13 முதல் 26-ஆம் தேதி வரை சொந்த ஊா் செல்வதற்கான பயணத்தை மட்டுமே மேற்கொள்ள முடியும்,. அதே நாள்களில் சொந்த ஊரிலிருந்து ஊா் திரும்புவதற்கான பயணத்தை மேற்கொள்ள முடியாது. மேலும், சொந்த ஊா் செல்வதற்கு மற்றும் ஊா் திரும்புவதற்கென இருவழி பயணச் சீட்டுகளையும் முன்பதிவு செய்யும்போதுதான், 20 சதவீத கட்டண சலுகையைப் பெற முடியும். அதோடு, இந்த கட்டண சலுகை திட்டத்தின் கீழ் ரயில்களில் ஒரே வகுப்பில் பயணிக்க வேண்டும் என்பதோடு, ஒரே ஊருக்கு மட்டுமே சென்று திரும்ப வேண்டும்.

இத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யும் பயணச் சீட்டுகளுக்கு கட்டணத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சுதந்திர தினம் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றிருப்பவர்கள், அவசரத்தில், தீபாவளிக்கு ஊருக்குப் போக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யாமல் விட்டுவிடக் கூடாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து