எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : திருபுவனம் பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் நேற்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொருளாளர் ஷேக் அப்துல்லா என்பவரின் வீட்டில் காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சோதனையின் பின்னணி என்ன? - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ராமலிங்கம், இவர் பாத்திரக் கடை நடத்தி வந்தார். இவர் அப்பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, 2019 பிப்ரவரி 5ஆம் தேதி அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஸாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன், திருமங்கலக்குடியைச் சேர்ந்த முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், அவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா, காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த படுகொலை குறித்து என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து அப்பிரிவு அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, துப்பு துலக்க ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் என்ஐஏ அதிகாரிகளும் மேலும் பலரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் (37), தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி பகுதியைச் சேர்ந்த புர்ஹானுதீன் (31), திருமங்கலகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது (30), அதேப் பகுதியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன் (31) ஆகிய 5 பேர் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதத்தில் 5 பேருக்கும் சேர்த்து ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தது.
வழக்கில் தலைமறைவாக இருந்த 5 பேர் உள்பட 18 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதேநேரத்தில் தலைமறைவாக இருக்கும் நபர்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தேடப்பட்டு வந்த முகமது அலி ஜின்னா கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
மேலும், இவ்வழக்கில் முக்கிய நபராக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் ஜனவரி மாதம் என்ஐஏ போலீஸார் சென்னையில் கைது செய்தனர். இந்த வழக்கை மிகத் தீவிரமாக என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், இந்த சோதனைகள் நடந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-10-2025.
10 Oct 2025 -
சென்னையில் பரபரப்பு: ஐ.டி. நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Oct 2025சென்னை : சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஒரே விமானத்தில் பயணம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு
10 Oct 2025கோவை : கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற விமானத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அண்ணாமலை திடீர் என சந்தித்துக்கொண்டனர்.
-
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்கு ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம்
10 Oct 2025சென்னை : சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிக்கு ரூ.250 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
-
பிரபல ரவுடி நாகேந்திரனின் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய ஐகோர்ட் உத்தரவு
10 Oct 2025சென்னை : பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
30 மீனவர்கள் கைது எதிரொலி: ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம்
10 Oct 2025ராமநாதபுரம் : ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: கரூரில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
10 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 3 இடங்களில் முகாமிட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
-
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
10 Oct 2025புதுச்சேரி : புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம்: தென்பெண்ணை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
10 Oct 2025சென்னை : சாத்தனூர், கிருஷ்ணகிரி அணைகளில் இருந்து உபரநீர் வெளியேற்றம் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
20205-அமைதிக்கான நோபல் பரிசு: வெனிசுலாவின் மரியாவுக்கு அறிவிப்பு - ட்ரம்ப் ஏமாற்றம்
10 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.;
-
போராட்டம் நடத்த முயற்சி: தூய்மை பணியாளர்கள் கைது
10 Oct 2025சென்னை : சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வரும் 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்
10 Oct 2025திருப்பதி : திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருகிற 20-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜய் தமிழக காவல்துறையினரின் கட்டாயத்தால்தான் வெளியேறினார் : சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. வாதம்
10 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காவல்துறையினரின் கட்டாயத்தால் தான் விஜய் வெளியேறினார் என்று சுப்ரீம்கோர்ட்டில் த.வெ.க. தரப்பு வாதிட்டது.
-
சிறுநீரக முறைகேடு வழக்கு: தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு
10 Oct 2025புதுடெல்லி : சிறுநீரக முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.
-
நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்: கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதி
10 Oct 2025நெல்லை : நெல்லையில் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
8 போர்களை நிறுத்தியுள்ளேன்: நோபல் பரிசு கிடைக்காத குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரக்தி
10 Oct 2025வாஷிங்டன் : ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கே அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார் என்று அவருக்கே தெரியாது.
-
தொழில்நுட்ப கோளாறு: டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் துபாயில் தரையிறக்கம்
10 Oct 2025துபாய் : டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 150-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் துபாயில் தரையிறக்கப்பட்டது.
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை முன்னிறுத்த இன்டியா கூட்டணி திட்டம்
10 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த இன்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது.
-
வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக 2,221 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் : பிரதமரை சந்தித்து பினராயி விஜயன் கோரிக்கை
10 Oct 2025டெல்லி : பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் திடீரன சந்தித்து பேசினார்.
-
டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி: ஜெய்ஸ்வால் அபார சதத்தால் இந்தியா சிறப்பான தொடக்கம்
10 Oct 2025புதுடெல்லி : டெல்லி 2-வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அபார சதத்தால் இந்தியா சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளது.
-
அம்ராம்ஸ் ஏவுகணையை பாக்.கிற்கு விற்கிறது அமெரிக்கா
10 Oct 2025அமெரிக்கா : பாகிஸ்தானுக்கு அம்ராம்ஸ் ஏவுகணைகளை விற்க அமெரிக்கா ஒப்புல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தன்னுடயை அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக்கூடாது: மோஷின் நக்வி
10 Oct 2025லாகூர் : தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை எடுக்கக் கூடாது எனவும், யாருக்கும் வழங்கக் கூடாது எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
-
புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை
10 Oct 2025சென்னை : சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பை அடுத்து புழல் சிறையில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடரும் : மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
10 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடையில்லை என்று தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இளம் வயதில் பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும்: சுப்ரீம் கோர்ட்
10 Oct 2025புதுடெல்லி : இளம் வயதிலேயே பாலியல் கல்வியை கற்றுத்தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.