முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.. உழைப்பாளர்களை மக்களை மதிக்கக்கூடிய கட்சி : எடப்பாடி பழனிசாமி பேச்சு

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Eps 2024-12-03

Source: provided

சென்னை : அ.தி.மு.க.. உழைப்பாளர்களை, மக்களை மதிக்கக்கூடிய கட்சி என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்சநல்லூர், துறையூர் தொகுதிகளையடுத்து முசிறி பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த ஏராளமான மக்களிடம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் ஏற்றம் பெற்றார்கள், தமிழகம் ஏற்றம் பெற்றது. அ.தி.மு.க. ஜனநாயகமுள்ள கட்சி, விசுவாசமாக உழைத்தால் சாதாரண தொண்டன் கூட உச்சப் பதவிக்கு வரமுடியும்.  நான் படிப்படியாக பொதுச்செயலாளராக உயர்ந்தேன். இதுதான் அ.தி.மு.க.. மக்களை, உழைப்பாளர்களை மதிக்கக்கூடிய கட்சி.

அ.தி.மு.க.வில் பெயின்டராகவும், டாஸ்மாக் பணியாளராகவும் இருந்தவர்களுக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுத்தோம். மதம், ஜாதி அடிப்படையில் அ.தி.மு.க. செயல்படுவதில்லை. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.

முசிறியில் விவசாயம் சார்ந்த பணிகள்தான் அதிகம். ஒரு பகுதி மேடானது, ஒரு பகுதி வயல் பகுதி. விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். தொடக்க வேளாண் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகளுக்காக அ.தி.மு.க. ஆட்சியில் குடிமராமத்து திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டது. அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒருபக்கம் ஏரிகள் ஆழமாகின, இன்னொரு பக்கம் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது.

விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். இன்று ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இந்த பகுதியில் தடுப்பணை கேட்டீர்கள், அ.தி.மு.க. ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது, அதை தி.மு.க ரத்து செய்துவிட்டது, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அது நிறைவேற்றப்படும்.

கரோனா காலத்தில் விலை மதிக்கமுடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். நோயைப் பற்றி எதுவுமே தெரியாமல் நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். அச்சமயம் பாரத பிரதமர் மோடி எல்லா முதல்வர்களிடம் காணொளி காட்சி மூலம் பேசியபோது, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுகிறது, தமிழ்நாட்டைப் பின்பற்றுங்கள் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து