முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க திட்டம்

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      தமிழகம்
EP 2023-09-25

Source: provided

சென்னை : தமிழ்நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் மின்சார தேவை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அடுத்த கோடை காலத்திற்குள் மின்சார தேவையை சமாளிக்கிற வகையில் முக்கிய முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் தினசரி மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின்சார தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. மே மாதத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மின்சார தேவை அதிகரிக்கவில்லை. 2026-2027-ம் ஆண்டில் தமிழகத்தின் மின்சார தேவை 23 ஆயிரம் மெகா வாட்டாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மின்சார தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தடையில்லாமல் மின்சார வினியோகம் செய்வதற்காக, வருகிற 2026-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதியிலிருந்து மே மாதம் 15-ந்தேதி வரை 7 ஆயிரத்து 40 மெகாவாட் மின்சாரம் வாங்க குறுகிய ஒப்பந்தப்புள்ளி கோருவதற்காக, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் அனுமதி கோரியிருந்தது.

அதன்படி, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் ‘பீக் ஹவர்' எனப்படும், உச்ச நேர மின்சார தேவையை ஈடுகட்ட வெளிசந்தையில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 720 மெகாவாட், மார்ச் மாதம் 1,520, ஏப்ரல் மாதம் 2,400, மே மாதம் 2,400 மெகாவாட் கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இதில் நாள் முழுவதும் 4 ஆயிரத்து 400 மெகாவாட்டும், மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை 2 ஆயிரத்து 640 மெகாவாட்டும் மின்சாரம் பெறப்படுகிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து