முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து முதல் முறையாக மனம் திறந்தார் விராட் கோலி : சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், துக்கமாக மாறியது

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      விளையாட்டு
Virat-Kohli 2023-10-02

Source: provided

மும்பை : பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் விராட் கோலி. அதில் சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள், துக்க நாளாக மாறியது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

பாராட்டு விழா... 

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி அந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தலா ரூ.10 லட்சம்... 

இந்த சம்பவத்தில் ஆர்.சி.பி. அணி, கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஆர்.சி.பி அணி நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு மேலும், தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆர்.சி.பி. கேர்ஸ் அறிவித்துள்ளது.

கோலி அஞ்சலி... 

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு விராட் கோலி அஞ்சலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்.சி.பி. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், "ஆர்சிபி அணி வரலாற்றில் சந்தோஷம் நிறைந்ததாக இருக்க வேண்டிய நாள், துக்கம் நிறைந்ததாக மாறியது. கொண்டாட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். இந்த இழப்பு எங்கள் கதையின் ஒரு அங்கமாகி விட்டது. அன்பு, அக்கறை, மரியாதையுடன் ஒன்றாக முன்னோக்கி செல்வோம்!" என்று கோலி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து