முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சவுபின் வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      தமிழகம்
Soubin-Shahir 2025-09-03

Source: provided

சென்னை : நடிகர் சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

ரஜினியின் ‘கூலி’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மலையாள நடிகர், சவுபின் சாஹிர். இவர், 'மஞ்சும்மள் பாய்ஸ்' மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாஹிர் தயாரித்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் சவுபின் சாஹிர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் செப்.5-ம் தேதி துபாயில் நடக்கும் விருது விழாவில் கலந்துக் கொள்ள அனுமதி கோரி, எர்ணாகுளம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சவுபின் சாஹிர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முக்கிய சாட்சி வெளிநாட்டில் இருப்பதால், அவரை அனுமதிக்கக் கூடாது என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து சவுபின் சாஹிர் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவர் துபாய் செல்ல தடை விதித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து