முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்: நிறுவனங்களுக்கு பி.சி.சி.ஐ. அழைப்பு

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2025      விளையாட்டு
BCCI 2025-08-22

Source: provided

புதுடெல்லி : இந்திய அணிக்கு ஸ்பான்சர் தொடர்பாக நிறுவனங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தை வருகிற 12-ந்தேதிக்குள் ரூ.5 லட்சம் செலுத்தி வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

ஸ்பான்சர் பெயர்... 

இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை ஸ்பான்சராக (டைட்டில்) ஆன்லைன் விளையாட்டு தளமான டிரீம்11 இருந்து வந்தது. மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, டிரீம்11 ஒப்பந்தம் காலம் முடிவதற்கு முன்பாகவே விலக நேரிட்டது. இதனால் வருகிற 9-ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் சீருடையில் டைட்டில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் விளையாட உள்ளனர்.

விண்ணப்பிக்க... 

இந்த நிலையில் இந்திய அணிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப்புக்கு தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கும் படி இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முறைப்படி அழைப்பு விடுத்தது. ஆனால் ஆன்லைன் சூதாட்டம் மூலம் பணபரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், அவற்றில் முதலீடு வைத்துள்ள நிறுவனங்கள், நபர்கள் இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ எங்கு இருந்தாலும் ஸ்பான்சர்ஷிப் உரிமம் கோருவதற்கு அனுமதி இல்லை. மேலும், கிரிப்டோகரன்சி சார்ந்த நிறுவனங்களுக்கும் அனுமதி கிடையாது என கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.

ரூ.5 லட்சம் செலுத்தி... 

இதற்கான விண்ணப்பத்தை வருகிற 12-ந்தேதிக்குள் ரூ.5 லட்சம் செலுத்தி வாங்கிக் கொள்ள வேண்டும். சமர்ப்பிக்க கடைசி நாள் 16-ந்தேதியாகும். கடந்த 3 ஆண்டுகளில், சராசரியாக குறைந்தது ரூ.300 கோடி வர்த்தகம் செய்துள்ள நிறுவனங்களே இதற்கு விண்ணப்பிக்க முடியும். புதிய ஒப்பந்தத்தின் மூலம் ரூ.450 கோடி வரை வருவாய் கிடைக்கும் என கிரிக்கெட் வாரியம் எதிர்பார்க்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து