முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல்: ஒரே இடத்தில் இனி நுழைவு கட்டணம் வசூல்

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2025      தமிழகம்
Kodaikanal 2025-07-13

Source: provided

கொடைக்கானல் : கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல நேற்று முதல் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு சுற்றுலா இடத்திற்கும் அந்தந்த இடத்தில் தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வனத்துறை சுற்றுலா இடம் தொடங்கும் பகுதியான தூண் பாறையில், அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் சேர்த்து சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளில் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.20, வெளிநாட்டினருக்கு ரூ.1,000 என நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உள்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.50, பைக்கிற்கு ரூ.20, வெளிநாட்டினர் வரும் கார் மற்றும் வேனுக்கு ரூ.500, பைக்கிற்கு ரூ.100-ஆக நுழைவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சுற்றுலா இடங்களில் தனித்தனியாக டிக்கெட் பெறுவதற்கு பதிலாக ஒரே இடத்தில் டிக்கெட் பெறும் முறை சுற்றுலா பயணிகளுக்கு சுலபமாக இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து