முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச மாநிலத்தில் விபரீதம்: நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் திடீர் தற்கொலை

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      இந்தியா
Neet 2023-04-20

Source: provided

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் முகமது அன்ஸ் (வயது 21). இவர் கான்பூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்நிலையில், விடுதி அறையில் நேற்று முன்தினம் மாலை தனியாக இருந்த முகமது அன்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விடுதியில் தங்கி இருந்த சக மாணவன் அறைக்கு சென்று பார்த்தபோது முகமது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடைந்துள்ளார். இது குறித்து விடுதி நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் முகமது அன்ஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்வதற்குமுன் முகமது எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் முகமது எழுதியிருப்பதாவது, அம்மா - அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனது வாழ்க்கையில் நான் சோர்வடைந்துவிட்டேன். எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மரணத்திற்குப்பின்னும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து