முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் குளறுபடி..? தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
EPS 2020 11-16

கோவை, டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாட பழனிசாமி டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் குளறுபடி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது கொடுமையான செயல். மக்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பாலியல் வன்கொடுமையை தடுத்து நிறுத்த திராணியற்ற அரசாக தி.மு.க. உள்ளது தெளிவாகிறது. அரசு, காவல்துறை மீது பயம் இல்லாமல் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா, என்ற சந்தேகம் எழுகிறது. போக்சோ வழக்கில் ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது.

டி.ஜி.பி. நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை தி.மு.க. அரசு பின்பற்றவில்லை. தமிழகத்தில் நிரந்தர டி.ஜி.பி. நியமனம் செய்யப்படவில்லை. தமிழகத்தில் அரசாங்கமும், காவல் துறையும் இருக்கிறதா என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்க வலியுறுத்தியும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. டி.ஜி.பி. நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் அரசு இத்தனை பாரபட்சம் காட்டுகிறது?

வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆர். எஸ்.ஐ.ஆர் என்றாலே தி.மு.க. அலறுகிறது, பதறுகிறது. எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ள கால அவகாசம் போதாது என கூறுகின்றனர். ஒரு மாதம் காலம் இருக்கிறது.300 வீடுகள் இருக்கும் ஒரு பாகத்தில் வாக்காளர் படிவம் கொடுக்க 8 நாட்கள் போதும். போலி வாக்காளர்களை நீக்க எஸ்.ஐ.ஆர். அவசியம். தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். பணிகளில் தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

தி.மு.க.வும், கூட்டணிக்கட்சிகளும் எஸ்.ஐ.ஆர்-யை எதிர்க்கும் நோக்கம் திருட்டு வாக்குகளுக்காகத்தான். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை மக்களுக்கு கூற ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். உயிரிழந்த ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ளது. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அதி.மு.க. வழக்கு தொடர்ந்தது உண்மைதான். தி.மு.க. தவறான தகவல்களை தெரிவிப்பதாலேயே எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் வழக்கு போட்டுள்ளோம்.

என் மகனையோ, மருமகனையோ கட்சியில், ஆட்சியில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இதற்குமுன் கட்சியில் இருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது வைத்தார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக்கூறுகிறார் செங்கோட்டையன். 

அதி.மு.க. ஆட்சியை தி.மு.க.வால் குறை சொல்ல முடியாததால் பா.ஜ.க.வுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க.தான் தலைமை என உள்துறை  அமைச்சரே அறிவித்துவிட்டார். முதல்வர் வேட்பாளரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்தான் என்பதை அமித்ஷா உறுதி செய்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து