முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டைக்கு 6 புதிய அறிவிப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

திங்கட்கிழமை, 10 நவம்பர் 2025      தமிழகம்
Stalin 2021 11 29

புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் உள்ளிட்ட 6 புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அரசின் திட்டப்பணிகளை கள ஆய்வு மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று சென்றார். கீரனூர் அருகே களமாவூரில் முகாம்பிகை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அத்துடன் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார், ஆக மொத்தம் ரூ.767 கோடியில் வளர்ச்சி பணிகளை முதல்வர்  தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

1) அறந்தாங்கியில் இருக்கக்கூடிய வீர கொண்டான் ஏரி ரூ.15 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

2) கீரமங்கலம் விவசாயிகள் நலன் கருதி, அவர்கள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களை சேமிக்க ரூ. 1.16 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

3) வடகாடு ஊராட்சியில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும்.

4) இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க புதுக்கோட்டையில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும்.

5)  கந்தர்வகோட்டை ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

6)  பொன்னமராவதி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

போன்ற அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து