முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
NIA 2024-04-06

Source: provided

புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

டெல்லி செங்கோட்டை அருகே நவ. 10 (திங்கள்கிழமை) மாலை கார் வெடித்துச் சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கலாம் என்றும் பயங்கரவாத சதிக்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனாலேயே சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 3 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த வழக்கை டெல்லி காவல் துறையிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.)யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. என்.ஐ.ஏ. டி.ஜி. விஜய் சாகரே தலைமையிலான இந்தக் குழுவில் ஐஜி, இரண்டு டிஐஜிக்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டிஎஸ்பி நிலை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு இந்த தாக்குதலுடன் தொடர்பிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் இந்த குழு கண்காணிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. டிஜி விஜய் சாகரே உளவுத்துறை தலைவருடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து