முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் விமான விபத்து - 2 பேர் பலி

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      உலகம்
America-Plane-crash-2025-11

வாஷிங்டன், அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்த விபத்தில்  தந்தை - மகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

கரீபியன் தீவு நாடான ஜமைக்காவை கடந்த 28ம் தேதி மெலிசா புயல் தாக்கியது. இந்த புயலால் ஜமைக்கா பெரும் பாதிப்பை சந்தித்தது. புயலால் பாதிக்கப்பட்ட பலரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா செய்து வருகிறது. அந்த வகையில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 53), அவரது மகள் செரினா (வயது 22) இருவரும் ஜமைக்காவுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய முன்வந்தனர்.

அதன்படி, பல்வேறு நிவாரண பொருட்களுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து சிறிய ரக விமானத்தில் இருவரும் புறப்பட்டுள்ளனர். விமானத்தை அலெக்சாண்டர் ஓட்டியுள்ளார். இந்நிலையில், விமானம் புளோரிடாவின் கரொல் ஸ்பிரிங் பகுதியில் சென்றபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அலெக்சாண்டர் அவரது மகள் செரினா இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து