முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக வரலாற்றிலேயே முதல் முறை: த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2025      தமிழகம்
TVK 2025-11-18

Source: provided

சென்னை; தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக த.வெ.க. நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கியுள்ளோம். தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில் முதல்கட்டமாக தற்போது 106 மாவட்டங்களுக்கு உட்பட்ட 214 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 280 நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள் மற்றும் அதை சார்ந்த 21 ஆயிரத்து 134 கிளை மற்றும் வார்டுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பேருக்கு கியூ.ஆர்.கோடு குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து