முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      தமிழகம்
eps

Source: provided

சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தில் மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டினால் காவிரி படுகை மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள முதல்-அமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து பேச வேண்டும். ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் பேசி முதல்வர் சுமுகமான முடிவை எட்ட வேண்டும்.

மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை திமுக அரசு கவனக்குறைவாக அனுப்பியுள்ளது. திட்ட அறிக்கையை சமர்ப்பித்தபோது 2011 மக்கள் தொகையை திமுக அரசு குறிப்பிட்டது ஏன்? 2025-ம் ஆண்டு மக்கள் தொகையை கணக்கிட்டு அனுப்பியிருந்தால் ஒப்புதல் கிடைத்திருக்கும். கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மாநில அரசிடம் தான் குளறுபடி உள்ளது. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மெட்ரோ ரெயில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியை கொல்லும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் தமிழக அரசு கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்கிறது. நிரந்தர டிஜிபியை நியமிக்காமல் சட்டம் ஒழுங்கு எப்படி சீராகும்? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணையை அரசு எதிர்ப்பது ஏன்?

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முறையாக நடக்கவில்லை. தேர்தல் அதிகாரிகளை தாம்பரத்தில் ஒரே கதவு எண்ணில் 360 வாக்காளர்கள் உள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கக்கோரி மாவட்டந்தோறும் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையர் மீது டெல்லி தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. புகார் கூறியுள்ளது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த வலியுறுத்தியுள்ளோம். திமுக அரசு முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து