முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடற்படை ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக உ.பி.யை சேர்ந்த இருவர் கைது

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      இந்தியா
Jail

Source: provided

பெங்களூரு : கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய உ.பி.யை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு நிறுவனமான கொச்சின் ஷிப்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உள்பட பல்வேறு கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொச்சின் ஷிப்யார்டு கேரள மாநிலம் கொச்சி, கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது.

இந்நிலையில், கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் திறன், போர் கப்பல்களின் திறன் குறித்த ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கர்நாடக போலீசார் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோகித் (வயது 29), சாந்திரி (வயது 37) ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். 

இதில், ரோகித் கொச்சி கப்பல் கட்டும் தளத்திலும், சாந்திரி உடுப்பி கப்பல் கட்டும் தளத்திலும் பணியாற்றி வந்துள்ளனர். இருவரும் பணத்திற்காக கடற்படைக்காக தயாரிக்கப்படும் கப்பல்களின் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து