முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும்: பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2025      தமிழகம்
Pramalatha 2023-07-24

நீலகிரி, மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என்று என்று தெரிவித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் புரட்சி வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ளம் தேடி இல்லம் நாடி தேர்தல் பிரசாரத்திற்காக வந்துள்ள தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய இசைக்கு அவர்களுடன் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வடமாநிலத்தோருக்கு வாக்குரிமை வழங்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும். வடநாட்டினர் இங்கு (தமிழ்நாடு) வாருங்கள்.. வேலை பாருங்கள்.வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் வாக்குரிமை என்பது அவரவர் பிறந்த மாநிலத்தில்தான் இருக்க வேண்டும். வெறும் மாநிலங்களவை சீட்டுக்காக கூட்டணி அமைக்க மாட்டோம். தொண்டர்கள், மக்கள் விரும்பும் கூட்டணியை தே.மு.தி.க. அமைக்கும். இந்த வெற்றியை கேப்டன் காலடியில் கொண்டுபோய் சேர்ப்போம்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் தொற்சாலைகள் வர வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். 2026-க்கு பிறகு கேப்டனின் கனவுகள், லட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து