முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர்: தீப்தி சர்மா ரூ.3.20 கோடிக்கு ஏலம்

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2025      விளையாட்டு
Deepti-Sharma-2025-11-27

புதுடெல்லி, 4-வது மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தீப்தி சர்மாவை ரூ. 3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் வாங்கியது. 

5 அணிகள் போட்டி...

5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி வீராங்கனைகள் ஏலம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. ஏலத்தில் சமீபத்தில் உலகக் கோப்பை போட்டியில் தொடர்நாயகியாக ஜொலித்த இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி சர்மா, வேகப்பந்து வீச்சாளர்கள் கிரந்தி கவுட், ரேணுகா சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசரனி, சினே ராணா ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மெக் லானிங், அலிசா ஹீலி, போபி லிட்ச்பீல்டு, நியூசிலாந்தின் அமெலியா கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், நடினே டி கிளெர்க், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் உள்ளிட்டோர் அதிக விலை போவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தீப்தி சர்மாவை....

அதன்படியே அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தீப்தி சர்மாவை ரூ. 3.20 கோடிக்கு உபி வாரியர்ஸ் வாங்கியது. சோபி எக்லெஸ்டோனை ரூ. 85 லட்சத்திற்கு உபி வாரியர்ஸ் வாங்கியது. மெக் லானிங்கை ரூ. 1.9 கோடிக்கு உபி வாரியர்ஸ் அணியே வாங்கியுள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான அலிசா ஹீலியை யாரும் ஏலத்தில் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் அடிப்படை விலை ரூ. 50 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்ட அவர் ஏலத்தில் விலை போகவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து