முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் முன்னேற்றம்: அமெரிக்கா

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      உலகம்
Mark-Rutte-2025-07-16

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்யா–உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை கடந்துவிட்டது. போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார். ரஷ்யா–உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தை டிரம்ப் பரிந்துரைத்தார். டிரம்ப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ, உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:“ரஷ்யா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பாக உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகள் பயனுள்ளதாக இருந்தன. இது சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் விதிமுறைகள் மட்டுமல்ல; இது உக்ரைனின் நீண்டகால செழிப்புக்கான விதிமுறைகளைப் பற்றியது. இன்று நாம் அதைக் கட்டியெழுப்பினோம் என்று நினைக்கிறேன். ஆனால் இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது” என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து