முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலியா- டெண்டுல்கரா..? - உலகின் சிறந்த பேட்ஸ்மேன் குறித்து சுனில் கவாஸ்கர் பதில்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      விளையாட்டு
Gavaskar 2023-10-22

Source: provided

ராஞ்சி : விராட் கோலியா- டெண்டுல்கரா..? யார் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதிலளித்துள்ளார்.

விவாதம் எழுந்தது...

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி தனது 52-வது சதத்தை (306-வது போட்டி) பதிவு செய்தார். இதன் மூலம் ஒரு வடிவில் அதிக சதம் அடித்த டெண்டுல்கரை (டெஸ்டில் 51 சதம்) அவர் முந்தினார். டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 49 சதம் அடித்துள்ளார். அவரை 37 வயதான விராட் கோலி ஏற்கனவே முந்தி இருந்தார். ஒரு நாள் போட்டியில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலியா, டெண்டுல்கரா? என்ற விவாதம் எழுந்து உள்ளது.

ரிக்கிபாண்டிங்கும்...

இது குறித்து முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:- விராட் கோலியுடன் ஆடியவர்களும் அவருக்கு எதிராக விளையாடியவர்களும் அவர் ஒருநாள் போட்டியில் மிக சிறந்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். ரிக்கிபாண்டிங்கும் அவரை ஒருநாள் போட்டியின் எல்லா கட்டத்திலும் ஒரு சிறந்த வீரர் என்று மதிப்பிட்டார். ஆஸ்திரேலியர்களிடம் இருந்து பாராட்டுகளை பெறுவது மிகவும் கடினமானது. நீங்கள் டெண்டுல்கரை கடந்து செல்லும் போது இந்த மனிதர் எங்கே நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து