முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலியில் கடத்தப்பட்ட ஐந்து இந்தியர்களை மீட்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

புதன்கிழமை, 3 டிசம்பர் 2025      இந்தியா
Kanimozhi

புதுடெல்லி, ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வருவது தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள் (பொன்னுதுரை, புதியவன், பேச்சிமுத்து, இசக்கிராஜா, தளபதி சுரேஷ்) மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 2025 நவம்பர் 6ம் தேதி அன்று, அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்திச் சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து